சுந்தர்பிச்சை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது : அதிர்ச்சியளித்த 'கூகுள்' ஊழியர்கள்...!

share on:
Classic

கூகுள் நிறுவனத்தின் தலைவர் 'சுந்தர் பிச்சை'யின் மீதும் அவரது நிர்வாகத்திறன் குறித்தும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் முடிவுகள் ஊழியர்களிடம், சுந்தர் பிச்சையின் மீது நம்பிக்கை குறைந்துள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மொத்த திறமைசாலிகளும் இங்க தான்யா!

கூகுள் நிறுவனத்தின் தலைவராக கடந்த 2015-ம் ஆண்டு பதிவியேற்றார் தமிழர் சுந்தர் பிச்சை. சமீபத்தில் கூகுளின் 'Alphabet Inc' நிறுவனம் உலகின் மிகவும் திறமையான ஊழியர்களை மட்டும் தேர்வுசெய்து வேலைக்கு அமர்த்தியது. இதன் மூலம் இணையதள நிறுவனங்களின் 'டாப்' இடத்தை பிடித்தது அந்நிறுவனம். ஆனால் இதுவே அதன் தலைவர் சுந்தர் பிச்சைக்கு வேட்டு வைக்கும் என்று அவர் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆண்டுதோறும் கூகுள் தன் ஊழியர்களிடம், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்துவது வழக்கம். 'Googlegeist' என்று அழைக்கப்படும் இந்த கருத்துக்கணிப்பு இவ்வருடமும் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.

 

அதிர்ச்சி முடிவுகள்:

கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கூகுள் நிறுவனத்தை பற்றிய பிச்சையின் 'கனவு' ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு 78 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்துள்ளனர். ஆனால் இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுந்தர் பிச்சையும் அவரது நிர்வாகமும் கூகிளை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லுமா? என்ற கேள்விக்கு . 74 பேர் ஆம் என்று சொல்லியுள்ளனர். இதுவும் கடந்த ஆண்டை விட 18 சதவீதம் குறைவு.

 

என்ன காரணம் ?

கணக்கெடுப்பின் முடிவுகள் பெரும்பாலும் சுந்தர் பிச்சைக்கு சாதகமாகவே இருந்தாலும், குறைந்துள்ள சதவீதம் தான் கவலை அளிக்கிறது. இதற்கு கடந்த வருடம் கூகுள் நிறுவனத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் ஏற்பட்ட கடும் பூசல் தான் முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை என்று நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடங்கி, கடுமையான விதிமுறைகள் காரணமாக பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் வெளியேறியது வரை கடந்த ஆண்டு கூகுளுக்கு கடினமான ஆண்டாகவே இருந்தது. இந்த கணக்கெடுப்பு முடிவுகளும் அதன் விளைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

கணக்கெடுப்பின் போது கேட்கப்பட்ட மற்ற கேள்விகளும் பதில்களும் :

பிச்சையின் முடிவுகளும் யுக்திகளும் கூகுள் நிறுவனத்தை சிறப்பாக செயலாற்ற உந்துகிறதா?
75 சதவீதம் பேர் ஆம். இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைவு.

பிச்சை பன்முக தன்மையை அதிகரிக்க முயற்சிக்கிறாரா?
79 சதவீதம் பேர் ஆம். இது கடந்த அண்டை விட 12 சதவீதம் குறைவு.

கூகுளின் எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது?
78 சதவீதம் ஆம். கடந்த ஆண்டை விட 11 புள்ளிகள் குறைவு.

இதுவரை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உங்கள் (ஊழியர்) பங்களிப்பு  சிறப்பாக உள்ளதா?
59 சதவீதம் ஆம். கடந்த ஆண்டை விட 11 சதவீதம் குறைவு .

கூகுள் நிறுவனத்தில் இருந்து நீங்கும் எண்ணம் இருக்கிறதா ?
74 சதவீதம் இல்லை. இது கடந்த ஆண்டை விட 2 சதவீதம் குறைவு.  

News Counter: 
100
Loading...

youtube