பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஊழியர்கள் பணிநீக்கம்..Google அதிரடி..!

Classic

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய 48 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்  கடந்த 2 ஆண்டில் பாலியல் புகாருக்கு ஆளான 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.   

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான யாரையும் கூகுள் ஆதரிக்கவில்லை என்றும் பாலியல் புகார்களை  தெரிவிக்கும் ஊழியர்களை நாங்கள் ஆதரிக்கிறோம், மதிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடையாளத்தைத் தெரிவிக்காமல்கூட புகார் தரலாம் என கேட்டுக்கொண்டுள்ள சுந்தர் பிச்சை, கூகுள் பாதுகாப்பான பணியிடமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார். 

ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஆன்டி ரூபின், கடந்த 2014 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய , அவர் வெளியேற 740 கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind