ஆப்பிளுக்கு 'Tough' கொடுக்குமா கூகிளின் புதிய ஸ்மார்ட் வாட்ச் !!

share on:
Classic

5 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட தனது 'ஸ்மார்ட் வாட்ச்' திட்டத்தை திரும்பவும் தொடங்க முடிவு செய்துள்ளது கூகிள் நிறுவனம். 

உறுதியானது!

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட் வாட்ச்களுக்கான தனது இயங்கு முறை(OS)யை வெளியிட்டது கூகிள். ஆனால் அதற்கு பிறகு அந்த வேலையில், எந்த முன்னேற்றமும் காட்டாமல் இருந்தது விட்டது. அதற்குள் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் தான் திரும்பவும் தனது ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது கூகிள். "கூகிளின் ஸ்மார்ட் வாட்ச் திட்டத்திற்காக திறம் வாய்ந்த ஊழியர்கள் தேவை" என்று அந்நிறுவனமமே தன் வளைதலத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த செய்து உறுதியாகி உள்ளது.

 

Fossil உடன் ஒப்பந்தம்:

கூகிளின் இந்த அறிவிப்பால் இன்னும் கொஞ்ச நாட்களிலேயே மக்கள் புகழ்பெற்ற 'கூகிள்' நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்சுகளை அணிந்து மகிழலாம் என்பது தெளிவாகியுள்ளது. இதற்காண முதல் வேலையாக ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் சிறந்து விளங்கும், நிறுவனமான Fossil-லிடம் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது கூகிள். அதன் அடிப்படியில் Fossil நிறுவனத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த சில ஊழியர்கள் கூகிள் நிறுவனத்துக்கு வந்து ஸ்மார்ட் வாட்ச் உருவாக்கத்தில் ஈடுப்பட உள்ளனர். இந்த புதிய முயற்சியின் மூலம் ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் 'ஆப்பிள்' நிறுவனத்தை கூகிள் தோற்கடிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

 

News Counter: 
100
Loading...

priya