பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - நக்கிரன் கோபால்

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரனைக்கு ஆஜரான நக்கிரன் ஆசிரியர் கோபால் விசாரணை முறையாக நடந்ததாகவும், வழக்கு தொடர்பாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவிகளையும், இளம்பெண்களையும் காதல் வலையில் சிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் வாரிசுகளுக்கு தொடர்பிருப்பதாலேயே விசாரணை மந்தகதியில் நடப்பதாக புகார் எழுந்ததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த விவாகரம் குறித்து பிரத்யேகமாக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால், சிபிசிஐடி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, சிபிசிஐடிபோலிசார் விசாரணை எனும் பேரில் தன்னை மிரட்டுவதாக நக்கீரன் கோபால் கூறினார்.

பிறகு இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது. தற்போது சிபிஐ விசாரணைக்கு ஆஜரான நக்கீரன் கோபால் விசாரனை முறையாக நடந்ததாகவும், தற்போது பொள்ளாட்சி பாலியல் வழக்கு விசாரணை மீது நம்பிக்கை வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan