அனுமதி பெற்றே ராணுவ தொப்பி அணிந்தோம்..ICC தகவல்..!

share on:
Classic

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள், முறையான அனுமதி பெற்றுவிட்டு ராணுவ தொப்பி அணிந்ததாக  ஐ.சி.சி தெரிவித்துள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கடந்த 8-ம் தேதி ராஞ்கியில் நடைபெற்ற போட்டியில், புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர். இந்திய வீரர்கள் கிரிக்கெட் விதிகளை மீறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி.யிடம் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ஐ.சி.சி., ஏற்கெனவே முறையான அனுமதிபெற்றுவிட்டு, இந்திய வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்ததாகத் தெரிவித்துள்ளது. இதில் எந்த விதிமீறலும் இடம்பெறவில்லை என்றும் ஐ.சி.சியின் செய்தித் தொடர்பாளர் குறிப்பட்டார்.

 

News Counter: 
100
Loading...

sajeev