ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டம்..!

share on:
Classic

ரயில்வே துறையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் கோடி ரூபாயை மூதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரயில்வே துறையில் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 50 லட்சம் கோடி மூதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த 65 ஆண்டுகளாக இந்திய ரயில்வே துறையில் 30 விழுக்காடு கட்டமைப்புகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ரயில்வே துறையில் உலகின் சிறந்த கட்டமைப்புகளை கொண்ட நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan