இந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கிராமி விருது... 'This is America’ அசத்தல்

share on:
Classic

இந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கிராமி விருதை 'This is America’ பாடல் தட்டிச் சென்றுள்ளது. 

கிராமி விருது:
இசைத்துறையில் உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது கிராமி விருது. உலக இசை அரங்கில் பல்வேறு பரிமாணங்களில் ஜொலிக்கும் கலைஞர்களில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான 61-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் கடந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரிலீஸான பாடல்கள் மட்டுமே கிராமி விருதுக்கான போட்டியில் களமிறங்கியிருந்தன. இதற்கான பரிந்துரைப் பட்டியல் கடந்தாண்டு டிசம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது விருது வழங்கும் விழா இசை முழக்கங்களுடன் விண்ணைப் பிளந்து நடைபெற்றது. 

இந்தாண்டின் சிறந்த பாடல்:
அமெரிக்காவில் உள்ள பிரச்சனைகளை மையமாக வைத்து அட்லாண்ட்டாவைச் சேர்ந்த ஹிப்-ஹாப் கலைஞர் டொனால்டு குளோவர் 'This is America' என்ற பாடலை உருவாக்கி இருந்தார். யூடியூபில் கடந்தாண்டு வெளியான இந்த பாடல் இப்போது வரை 482 மில்லியன் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கிராமி விருதுக்கு 'This is America’ பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

கிராமி தேர்வுக்குழு விளக்கம்:
அமெரிக்காவில் நிகழ்ந்துவரும் துப்பாக்கி வன்முறை, இனவெறி மற்றும் பாகுபாடு உள்ளிட்டவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க அரசியல் சாயம் கொண்ட பாடலாக இது இருந்தாலும் ’இசை’ என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்தே கிராமி விருதுக்கு 'This is America’ தேர்வு செய்யப்பட்டதாக தேர்வுக்குழுவினர் விளக்கம் அளித்தனர். Childish Gambino என்ற ஆர்ட்டிஸ்ட் பெயரில் அசத்தலாக பாடல் பாடி அசத்தியிருந்த டொனால்டு குளோவர் தற்போது உலகளவில் டிரெண்டிங்காகி உள்ளார். 

 

News Counter: 
100
Loading...

mayakumar