பாட்டியுடன் செல்பி எடுத்துக்கொண்ட தோனி..!!

share on:
Classic

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு அவரது தீவிர ரசிகையான பாட்டி ஒருவர் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்த புகைபடங்கள் வலைதளங்களில் பரவி வருகிறது.

தோனிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் வயது வித்தியாசம் இன்றி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டியை காண தோனியின் ரசிகையான பாட்டி ஒருவர் வந்திருந்தார்.

மும்பையை சேர்ந்த அந்த பாட்டி தோனி விளையாடும் சென்னை அணியை ஆதரிப்பதற்காக தனது பேத்தியுடன் வந்துள்ளார். அப்போது தோனியின் கைகளைப் பிடித்து வாழ்த்து தெரிவித்ததுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவளைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan