தொடங்கியாச்சு கிரேட் இண்டியன் சேல் - மொபைல் வாங்க குழப்பமா? அப்போ இதை படிங்க..!

share on:
Classic

ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனை : அதிரடி தள்ளுபடியில் ஒன் பிளஸ் 6T, ரியல் மீ 2 ப்ரோ, நோக்கியா 5.1, காலக்ஸி S9 மொபைல் போன்கள்

ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஷாப்பிங் இணையதளங்கள் இந்த ஆண்டின் முதல் விற்பனையை அதிரடி தள்ளுபடியில் தொடங்கியுள்ளது. உங்களுடைய பழைய மொபைலை மாற்றவும், புதிய மொபைலை வாங்க எண்ணும் மக்களுக்கும் நல்ல தள்ளுபடியுடன் கூடிய ஸ்மார்ட் போனை வாங்க இதுவே சரியான நேரம். ஃபிளாட் டிஸ்கவுண்ட், வட்டியில்லா தவணை முறை, என இன்னும் பல சலுகைகளை இரண்டு நிறுவனமும் போட்டி போட்டு அள்ளி வீசி வருகிறது. 

இதுபோக அமேசான் எச்.டி.எப்.சி வங்கியுடன் இணைந்து எச்.டி.எப்.சி டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் 10% டிஸ்கவுண்ட் மற்றும் ஃபிளிப்கார்ட் எஸ்.பி.ஐ வங்கியுடன் இணைந்து எஸ்.பி.ஐ வங்கி டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை அளித்து வருகிறது.

ஒரு மாடல் மொபைலுக்கு மட்டும் ஆஃபர் இருந்திருந்தால் நாம் அனைவரும் முந்தி அடித்துக்கொண்டு அந்த மொபைலை வாங்கி இருப்போம். ஆனால், இங்கு பல மொபைல்கள் ஆஃபர் விலையில் வந்துள்ளதால் எந்த மொபைல் வாங்குவது என்ற குழப்பம் வரும், அந்த குழப்பம் வேண்டாம் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரையிலான மொபைல் போன்களின் ஆஃபர் மற்றும் செயல்திறனை உங்களுக்காக அளிக்கிறோம். இதை படிங்க... குழப்பத்தை விடுங்க...

அமேசான் மற்றும்  ஃபிளிப்கார்ட்டில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் தள்ளுபடி

சாம்சங் காலக்ஸி எஸ் 9 (Samsung Galaxy S9) (4GB,64GB)

ரூ.62,500க்கு விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட் போன் தற்போது ஆஃபர் விலையில் ரூ. 48,900-க்கு விற்பனைக்கு வந்துள்ளது.மேலும் ரூ.9000 வரை எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை அமேசான் நிறுவனம் அளிக்கிறது.

மேலும் ஆன்லைனில் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஸ்விக்கி, புக் மை ஷோ போன்ற சேவைகளில் ரூ.2000 வரை கேஷ் பேக் ஆஃபரையும் பெறலாம். 5.8 இன்ச் எச்.டி டிஸ்பிலே மற்றும் எக்ஸினோஸ் 9810 எஸ்ஓசி செயலியுடன், 4GB ரேம் வசதியையும் இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது. 12 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா மற்றும் 8 மெகா பிக்ஸல் முன் பக்க கேமரா வசதியையும் இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது.

தள்ளுபடி விலை : ரூ.48,900

Related image

ரியல் மீ 2 ப்ரோ Realme 2 Pro (8GB, 128GB)   

ரூ.16,990 ஆரம்ப விலையுடன் ரியல் மீ 2 ப்ரோ Realme 2 Pro (8GB, 128GB) மொபைல் ஃபிளிப்கார்ட்டில் ரிபப்ளிக் டே சேல் என விற்பனைக்கு வந்துள்ளது. பழைய மொபைலை எக்ஸ்சேன்ஜ் செய்வதன்   மூலம் ரூ.13,900-க்கு இந்த மொபைலை நிச்சயமாக வாங்க முடியும். 6.3 இன்ச் டிஸ்பிலே இரண்டு கேமராக்களை பெற்றிக்கும் இந்த ஸ்மார்ட் போன் 16 மெகா பிக்ஸல் திறன் கொண்ட செல்ஃபி கேமராவை பெற்றுள்ளது. ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி செயலியுடன் 8 GB RAM மெமரியை பெற்றுள்ளது.

தள்ளுபடி விலை : ரூ.16,990

Image result for realme 2 pro 8gb 128gb flipkart

ஆசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 32 ஜிபி (Asus ZenFone Max M2 32GB)

பட்ஜெட் விலைக்கு கிடைக்கும் ஸ்மார்ட் போன் ஆன ஆசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 32 ஜிபி ரூ.12,699-லிருந்து மேலும் விலை குறைக்கப்பட்டு ரூ.9,499-க்கு ஃபிளிப்கார்ட் நமக்கு வழங்குகிறது. 6.26 எச்.டி டிஸ்பிலே உடன் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஓசி செயலியுடன் 3GB RAM மெமரியை பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் 8 மெகா பிக்சல் முன்பக்க மற்றும் பின் பக்க கேமரா வசதியை பெற்றுள்ளது. 4,000mAh பேட்டரி திறனை பெற்றுள்ளது. 

தள்ளுபடி விலை : ரூ.9,499

Image result for Asus ZenFone Max M2 32GB

ஒன் பிளஸ் 6டி (OnePlus 6T) 

6.41 இன்ச் புல் எச்.டி + AMOLED (active-matrix organic light-emitting diode) டிஸ்பிலே அமைப்பை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் போனுக்கு அமேசான் எந்த தள்ளுபடியையும் வழங்கவில்லை, ஆனால் எக்ஸ்சேன்ஜ் கூடுதலாக மேலும் ரூ.2000 வழங்கியுள்ளது.

விலை : ரூ.37,999

Image result for OnePlus 6T

மோட்டரோலா ஒன் பவர் 64ஜிபி (Motorola One Power 64GB)

மோட்டரோலா ஒன் பவர் 64ஜிபி மீண்டும் ரூ.13,499-க்கு விற்பனைக்கு வருகிறது. ரூ.18,999-லிருந்து ரூ. 13,499-க்கு ரிபப்ளிக் டே சேல் மூலம் ஃபிளிப்கார்ட் நமக்கு வழங்குகிறது.6.2 இன்ச் எச்டி டிஸ்பிலே, 5000mAh பேட்டரி திறனுடன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் வருகிறது. மேலும் 12 மெகா பிக்சல் முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா வசதியை பெற்றுள்ளது.

தள்ளுபடி விலை : ரூ.13,499

Image result for Motorola One Power 64GB

நோக்கியா 5.1 பிளஸ் (Nokia 5.1 Plus 32GB)

நோக்கியாவின் ஆஃபரை தவற விட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு. ரூ.9,999 விலையுடன் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா 5.1 பிளஸ் மொபைல் 5.8 இன்ச் டிஸ்பிலே, மீடியாடெக் ஹீலியோ பி60 செயலி 3 GB RAM என அசத்தலான செயல்திறனுடன் வெளி வந்துள்ள இந்த பட்ஜெட் மொபைல் 8 மெகா பிக்சல் முன் பக்க மற்றும் பின்பக்க கேமரா அமைப்பை பெற்றுள்ளது.

விலை: ரூ. 9,999

Image result for Nokia 5.1 Plus 32GB

நோக்கியா 6.1 பிளஸ் (Nokia 6.1 Plus 64GB)

ரூ.17,600 ஆரம்ப விலையுடன் விற்பனைக்கு வந்த நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.14,999 உடன் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. அதிகபட்சமாக ரூ.13,800 வரை எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் கொடுத்துள்ளது. 3060 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் 16 மெகா பிக்சல் முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா அமைப்பை பெற்றுள்ளது.

தள்ளுபடி விலை : ரூ.14,999

Image result for Nokia 6.1 Plus 64GB

ரெட்மி ஒய்2 (Redmi Y2)

ரெட்மி ஒய்2  4GB RAM, 64 GB ROM வசதியை கொண்ட ஸ்மார்ட் போன் ரூ.13,499-லிருந்து ரூ.9,999 ஆக விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் மூலம் ரூ.7,240-க்கு இந்த மொபைலை பெற்றுக்கொள்ளலாம். 16 மெகா பிக்ஸல் முன்பக்க மற்றும் பின்பக்க கேமராவை இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது.

தள்ளுபடி விலை : ரூ.9,999

Image result for Redmi Y2

ஹானர் 8சி (Honor 8C)

4GB,32 GB சேமிப்பு திறனை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் போன் ரூ.12,999 லிருந்து ரூ.10,999 ஆஃபர் விலைக்கு அமேசான் வழங்குகிறது. 6.26 இன்ச் எச்.டி டிஸ்பிலேயுடன் ஆண்ட்ராய்டு 8.1 இயங்கு தளத்துடன் இரண்டு பின்பக்க கேமரா மற்றும் 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமேராவையும் இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது.

தள்ளுபடி விலை : ரூ.12,999

Image result for Honor 8C)

விவொ வி9 ப்ரோ (Vivo V9 Pro)  

ரூ.19,990க்கு விற்பனைக்கு வந்த விவொ வி9 ப்ரோ ஸ்மார்ட் போன் ரூ. 15,900-க்கு அமேசானில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.மற்றும் ரூ.8,276 வரை எக்ஸ்சேன்ஜ் விலை போன்றவற்றையும் அமேசான் வழங்குகிறது. ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி செயலியுடன் 6 GB RAM மெமரி திறனையும் பெற்றுள்ளது. இரண்டு கேமராவை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் போன் 16 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா திறனை பெற்றுள்ளது.

தள்ளுபடி விலை : ரூ.15,900

Image result for Vivo V9 Pro

News Counter: 
100
Loading...

youtube