பாரம்பரியத்தை காக்கும் வாழை இலை..!!

share on:
Classic

பாரம்பரியத்தை போற்றி காக்கும் நம் தமிழ் திருநாட்டில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை வாழை இலை முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல.

கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் பூஜை, என அனைத்து பண்டிகைகளிலும் வாழை இலை மூலமே உணவு பரிமாறப்படுகிறது. தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான்.

வாழை இலை​யில் உண்பதன் பயன்கள்:

  • வாழை இலையில் சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணம் ஆகும். இளநரை வராமல் நீண்டநாள் தலைமுடி கருப்பாக இருக்கும்.
  •  இது ஒரு கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
  • சின்ன அம்மை, படுக்கை புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
  • தீக்காயங்கள் ஏற்பட்டால், வாழை இலை முழுவதும் இஞ்சி எண்ணெயை நன்றாக தடவி, கீழிலிருந்து மேல் பகுதி வரை அதை சுற்றி வந்தால் வெப்பத்தையும், தீக்காயத்தையும் குறைத்திட முடியும்.
  • மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். மேலும் விந்தணுக்களின் உற்பத்தியை பெருக்கும்.
  • உணவின் சுவையினை உணர செய்வதோடு தமிழர்களின் என்றும் அழிக்க முடியாத மரபு வாழை இலையாகும்.
News Counter: 
100
Loading...

vinoth