சினிமா டிக்கெட் விலை குறைய வாய்ப்பு.... 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு...

share on:
Classic

18% ஜிஎஸ்டி வரி வரம்பிலிருந்து 33 பொருட்களின் வரி விகிதத்தைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

33 பொருட்கள் 18% என்ற ஜிஎஸ்டி வரம்பிலிருந்து 12% மற்றும் 5% என்ற வரம்புகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் அனைத்துமே சாமானிய மக்கள் பயன்படுத்துபவைகள் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 28% வரம்பிற்குள் உள்ள 7 பொருட்களை 18% வரம்பிற்குள் கொண்டு வருமாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் மாநில பிரதிநிதிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதேபோல், ரூ. 100-க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 28%-ல் இருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 100-க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18% என்ற வரி விகிதம் 12%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகம் சார்ந்த 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

mayakumar