GST செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 20லட்ச ரூபாயிலிருந்து 40லட்சம் ரூபாயாக அதிகரிப்பு

Classic

ஜி.எஸ்.டி செலுத்துவதற்கான ஆண்டு வரம்பு 20 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக அதிகரிக்கப்படுள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 32வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் ஜி.எஸ்.டி வரி வரம்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டன. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான ஆண்டு வரம்பு 20 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும், ஜி.எஸ்.டி காம்போ ஸ்கீம் பெறுவதற்கான வரம்பு ஒரு கோடியில் இருந்து ஒரு கோடியே 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் சிறு, குறு நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

sasikanth