குஜராத் போலி எண்கவுண்டர் வழக்கு - விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்...

share on:
Classic

பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது 22 பேர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை, உச்சநீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக பதவி வகித்தபோது எந்த முகாந்திரமும் இன்றி 22 பேர் காவல்துறையால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர். 2002 - 2006 காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த என்கவுண்டர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை ஹெச்.எஸ்.பேடி தாக்கல் செய்தார்.

மேலும், அந்த அறிக்கை விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அறிக்கை விவரங்களை யாருக்கும் அளிக்கக்கூடாது என குஜராத் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜனவரி 3வது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

News Counter: 
100
Loading...

aravind