குடிநீர் கேட்ட பெண்களிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர்..!

share on:
Classic

குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் குஜராத் அமைச்சர் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குஜராத் அமைச்சர் குன்வர்த பாவாலியா ராஜ்கோட் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது கனேசாரா என்ற கிரமத்தில் அவரின் வாகனத்தை வழிமறித்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினர். 

இதற்கு பதிலளித்த அமைச்சர், சென்ற முறை தேர்தலில் தான் பல முறை பிரச்சாரம் செய்தும் தனக்கு 55 சதவீதம் மட்டுமே மக்கள் வாக்களித்ததாகவும், தனக்கு எத்தனை சதவீதம் வாக்களிக்கப்ட்டதோ அதற்கேற்ப தான் மக்களுக்கு குடி நீர் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அமைச்சர் குன்வர்ஜி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind