’ஹாப்ஸ் & ஷா’ படத்தின் 2-வது டிரைலர் வெளியீடு..!!

share on:
Classic

ஹாப்ஸ் & ஷா படத்தின் 2-வது டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆரம்பத்தில் மல்யுத்த வீரராக இருந்து இப்போது ஹாலிவுட் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக இருந்து வரபவர் தான் ட்வைன் ஜான்சன். பாஸ்ட் அண்ட் பூரியஸ் சீரியஸ், சான் அண்ட்ரியஸ், ராம்பேஜ் என பல மெகா ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் இப்போது ஹாப்ஸ் அண்ட் ஷா என்ற படத்தில் நடித்துள்ளார். 

அதிரடி திரைப்படமாக  உருவாகிருக்க இந்த ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தில் ஜேசன் ஸ்டத்தோம், இட்ரிஸ் எல்பா மற்றும் பிரபல மல்யுத்த ரோமன் ரெயின்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டேவிட் லெட்ச் இயக்கியிருக்கம் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தின் டிரைலர் வெளியாகி உலகமெங்கும் இருக்க ரசிகர்களுக்கு விருந்தளிச்சிருந்த நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருது. மேலும் இந்த ஹாப்ஸ் அண்ட் ஷா படம் வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.   ஏற்கனவே ட்வைன் ஜான்சன் மற்றும் ஜேசன் ஸ்டத்தோம் இருவரும் பாஸ்ட் அண்ட் பூரியஸ் படங்களில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan