கைகழுவும் முறை தெரிந்து கொள்வோம்

share on:
Classic
 • கைகளை கழுவுவோம். தொற்று நோய்களைத் தடுப்போம்.
 • கைகளை முதலில்  தண்ணீரில் நன்றாக நனைக்க வேண்டும். 
 • கை முழுவதும் நன்றாக மணிக்கட்டு வரை சோப்பு போடவும்.
 • உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்றாக நன்றாக தேய்க்க வேண்டும்.
 • இடது கை விரல்களை வலது கை விரல்களின் இடுக்குகளில் நுழைத்து நன்றாக தேய்க்கவும். இதே போன்று வலது கை விரல்களை இடது கை விரல்களின் இடுக்குகளில் நுழைத்து நன்றாக தேய்க்கவும்.
 • உள்ளங்கை பக்கமாக இரு கை விரல்களையும் கோர்த்து நன்றாக தேய்க்கவும். 
 • வலது விரல்களின்  பின்புறங்களை இடது விரல்களை மடக்கிப் பிடித்தவாறு அழுத்தி தேய்க்கவும். அதேபோல் இடது கைகளின்  விரல்களின்  பின்புறங்களை வலது கை விரல்களை மடக்கிப் பிடித்தவாறு அழுத்தி தேய்க்கவும். 
 • இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்து சுழற்றி நன்றாக தேய்க்கவும். அதேபோல் வலது கட்டைவிரலை இடது உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்க்கவும். 
 • வலது கைவிரல்களை குவித்து இடது உள்ளங்கைகளில் வைத்து சுழற்றி தேய்க்கவும். அதேபோல் இடது கைவிரல்களை குவித்து வலது  உள்ளங்கைகளில் வைத்து சுழற்றி தேய்க்கவும்.
 • தண்ணீரில் இரு கைகளையும் மணிக்கட்டு வரை சோப்பு நுரை பொங்கும் அளவுக்கு நன்றாக தேய்த்துக் கழுவவும். 
 • நல்ல சுத்தமான துணியால் இருகைகளையும் துடைக்கவும். 
 • துண்டை கொண்டு குழாயினை மூடவும். 
 • உங்களுடைய கைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளன. 
News Counter: 
100
Loading...

sankaravadivu