ராகுல் காந்தியின் பிறந்த நாள் இன்று..!

share on:
Classic

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் இன்று.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரன் தான் ராகுல் காந்தி. நேரு குடும்பத்து வாரிசு என்பது ஒருவருக்கான தகுதியா அல்லது தகுதிக் குறைவா என்று நாடு முழுவதும் அவ்வப்போது விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

1970-ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த ராகுல் காந்தி இளம் வயதிலேயே பெரும் அதிர்ச்சியான நிகழ்வுகளை சந்தித்தவர். 1984-ஆம் ஆண்டு அவருடைய பாட்டியான அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அவருடைய மெய்க்காப்பாளர்களில் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது ராகுலின் வயது 13. அவருடைய குடும்பம் முழுவதற்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தது. படிக்கும் கல்லூரியில் இயற்பெயருடன் இருக்க முடியாமல். வேறு பெயருடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டவர் ராகுல் காந்தி..!

பாட்டியின் படுகொலை கொடுத்த அதிர்வுகளிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தவருக்கு அடுத்து வந்தது மேலும் அதிர்ச்சி! 1991-ஆம் ஆண்டு அவருடைய தந்தை ராஜூவ் காந்தியை பயங்கரவாதிகள் குண்டு வைத்துக் கொன்றார்கள். அப்போது அவருக்கு வயது 21.

2 உயிர்களை நேரு குடும்பம் அரசியலில் பறி கொடுத்த பிறகும் அந்த குடும்பத்தின் வாரிசுகளை மீண்டும் கட்சிக்கு தலைமை ஏற்க இந்திய தேசிய காங்கிரஸ் அழைத்தது. இப்போது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார்..!

 உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அமேதி தொகுதியில் இருந்து 2004, 2009, 2014 ஆகிய 3 தேர்தல்களிலும் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் அவர் மக்களால் தோற்கடிக்கப்பட்டார். அதே வேளையில் அவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார். வயநாடு மக்கள் அவரை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்தார்கள்.

இந்திய மக்களின் வளமான எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு அவசியம். அந்த அடிப்படையில், இந்திய மக்களின். நல்வாழ்வை உறுதி செய்வதற்கு நல்ல உடல் நலமும் நீண்ட ஆயுளும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் ராகுல் காந்தி.!

.

News Counter: 
100
Loading...

Ragavan