‘பின்க் நகரத்துக்கு’ சுற்றுலா செல்லலாமா..? (பாகம் -1)

share on:
Classic

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது ஜெய்பூர். இது இந்தியாவின் பின்க் நகரம் (Pink City) என்று அழைக்கப்படும் எழில்மிகு நகரமாகும்.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூர் மிகவும் அழகானதாகவும், வசீகரிக்ககூடிய நகரமாகவும் உள்ளது. 1876-ல், சவாய் ராம் சிங் மன்னரின் ஆட்சி காலத்தில், வேல்ஸ் இளவரசர் ஜெய்பூரை பார்வையிட வந்தபோது, நகரம் முழுவதும் அவரை வரவேற்க இளஞ்சிவப்பு வர்ணம் தீட்டப்பட்டது. இதனால் ஜெய்பூர் நகரம் இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியவில் உள்ளவர்களை மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இங்கு உள்ள அரண்மனைகளும், கோட்டைகளும் மற்றும் அங்கு வசிக்கும் மக்களும், அவர்களின் தோற்றமும், வாழ்க்கைமுறையும் தான். இந்த அழகான ஊருக்கு சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக காணவேண்டிய இடங்கள் என்று சில இடங்கள் உள்ளது. அவற்றில் சிலவற்றைப் பற்றிக் காண்போம்.

ஆம்பர் கோட்டை (Amber Fort)
ஆம்பர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் மகாராஜா மான்சிங் அவர்களால் கட்டப்பட்டது. இந்த கோட்டை இந்து மற்றும் முஹலாய கட்டிட கலையின் சிறந்த கலவையாக காணப்படுகிறது. இந்தக் கோட்டை முழுவதும் வெள்ளை பளிங்கி (White Marble) கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டைக்கு மிகவும் அழகு சேர்க்கும் விதமாக, சுற்றிலும் மாதா ஏரி அமைந்துள்ளது. இந்த கோட்டையில் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் விதமாகவும், இக்கோட்டையின் சிறப்பம்சமாகவும் யானை சவாரி உள்ளது.

ஜந்தர் மந்தர் (Jantar Mantar)
ஜந்தர் மந்தர் சிவப்பு கற்கள் மற்றும் பளிங்கிக் கற்களை பயன்படுத்தி இரண்டாம் ஜெய் சிங் மஹாராஜா காலத்தில் கட்டப்பட்டது. ஜந்தர் மந்தர் மிக சிறந்த வானிலை ஆய்வு மையமாக திகழ்கிறது. பழங்காலத்திலேயே, இது மிக சிறந்த வானிலை நிலையமாக அறியப்படுகிறது. அதனால் உலகில் உள்ள அனைத்து வானியல் வல்லுனர்களாலும், ஜோதிடர்களாலும் மற்றும் தத்துவவியலாளர்களாலும் பெரிதும் கவரப்படுகிறது. இதன் சிறந்த கட்டிட வடிவமைப்பு அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

ஜெய்கர் கோட்டை (Jaigarh Fort)
ஜெய்கர் கோட்டை வெற்றியின் கோட்டையாக (Fort of Victory) திகழ்கிறது. இங்கு ஜெய்வானா எனும் மிகப் பெரிய பீரங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை சிறந்த பாதுகாப்புச் சுவராகவும், ஆயுதங்களையும், போர் கருவிகளையும் பதுக்கி வைக்கும் இடமாக இருந்துள்ளது. இக்கோட்டை 3 கிலோ மீட்டர் அகலமுடையது. ஜெய்பூரில் சுற்றிப் பார்ப்பதற்கு சிறந்த இடமாக ஜெய்கர் கோட்டையும் அமைந்துள்ளது.

நகர அரண்மனை (City Palace)
பிங்க் நகரத்துக்கு நீங்கள் சென்றால், சிட்டி பேளஸை பார்க்காமல் இருக்க முடியாது. இந்த அரணமனை இரண்டாம் ஜவாய் ஜெய் சிங் மன்னரால் 1729 மற்றும் 1732 ஆம் ஆண்டிற்குள் கட்டப்பட்டது. இந்த அரண்மனைக்குள் சந்திர மாஹால் மற்றும் முபாரக் மஹால் என இரண்டு பிறிவு உள்ளது. தற்போது சந்திர மஹால் கைவினை பொருட்களுக்கான அருங்காட்சியகமாக உள்ளது. இந்த அரண்மனையில் இருந்து பார்ப்பதற்கு நகரமே அழகாகத் தெரியும்.

ஜல் மஹால் (Jal)
ஜல் மஹாலின் கட்டமைப்பு ராஜ்புட் மற்றும் முஹலாய கட்டிடக்கலையின் கலவையாக வடிவமைக்கப்ட்டுள்ளது. இந்த அரண்மனை மன்சாகர் ஏரியில் கட்டப்பட்டுள்ளது. இது இயற்கை எழில்மிகு மலைக்குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. ஜல் மஹால் காந்தவியல் அறிவியலுடன் ஆச்சர்யமூட்டும் வகையில் கட்டப்பட்ட பிரத்தியேக கட்டமைப்பாகும். இங்கு உள்ள படகு சவாரி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது.

 

News Counter: 
100
Loading...

Ramya