ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கும் இரண்டு நடிகைகள்..!!

share on:
Classic

சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண்.  இளன் இயக்கத்தில் இவர் நடித்த பியார் பிரேமா காதல் படத்தின் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்திருந்தார். இளம் வயதினர்களை அதிகம் கவர்ந்த இந்த படம்  ஹரிஷ் கல்யாணின் படங்கள் பட்டியலில் மற்றுமொரு வெற்றி படமாக அமைந்துருந்தது.  

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடிக்கிறார்.  அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட்  ஹீரோயின் நடிகை ரேக்கா சக்ராபூர்த்தி நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில் இப்போது இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு மேலும் ஒரு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். 

ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த தனுசு ராசி நேயர்களே படத்தில் மேலும் இணையும் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan