பெண்களை ஆபாசமாக பேசிய ஹர்திக் பாண்டியா...BCCI நோட்டீஸ்..!

share on:
Classic

'காஃபி வித் கரண்' என்ற நிகழ்ச்சியில் பெண்களை பற்றி ஆபாசமாக பேசியதற்காக வறுத்தெடுக்கபட்ட கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, அதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இவரின் செயலுக்கு பிசிசிஐ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹிந்தியில் மிக பிரபலமான 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சில் முதல் முறையாக கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டிய மற்றும் KL ராகுல் ஆகியோர் தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

முகம் சுழிக்க வைத்த பாண்டியா :

முக்கியமாக ஹர்திக் பாண்டியா அந்த நிகழ்ச்சியில் பேசும் பொது பெண்களை பற்றி ஆபாசமாக பேசிய அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.குறிப்பாக அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோஹர் "கிளப்களில் பெண்களிடம்  நீங்கள் ஏன் பெயர் கேட்பதில்லை, அவர்களை பற்றி என்ன பேசுவீர்கள்" என்ற என்ற கேள்விக்கு. "அவரகளது அசைவுகளை கவனிப்பதே எனக்கு பிடிக்கும்" என்று அவர் கூறியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

வறுத்தெடுத்த ரசிகர்கள் :

இந்த நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக,இந்திய அணியின் ஆல் ரவுண்டரான அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்த சர்ச்சை குறித்து பாண்டிய மனம் திறந்துள்ளர். அதற்காக தான் தற்போது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பாண்டியா.

மன்னிப்பு கேட்டார் :

தனது டுவிட்டர் தளத்தில்அவர்  'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற எனது பதிகளால் எழுந்த சர்ச்சைக்கு பின், பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். சத்தியமாக நிகழ்ச்சியின் போக்கில் தான் அவ்வாறாக நான் சொல்ல நேர்ந்ததே தவிர யாரது உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கில் நான் எதுவும் பேசவில்லை "என்று கூறியுள்ளார்

pic.twitter.com/O0UlpFm43o

— hardik pandya (@hardikpandya7) January 9, 2019

முதல் சர்ச்சை :

ஏற்கனவே அந்த நிகழ்ச்சியில் "சச்சினனை விட கோலி தான் சிறந்தவர்" என்று கூறியதற்காக அவரை கிழி கிழி  என்று கிழித்தெடுத்த ரசிகர்கள், திரும்ப அவரது சர்ச்சைக்குரிய இந்த பேச்சால் ஆவேசத்துடன் அவரை குற்றப்படுத்தி வருகின்றனர் .இந்த நிலையில் தான், தன் மன்னிப்பு மூலம் சமாதான கொடியை ஏற்ற முயற்சி செய்துள்ளார் பாண்டியா.  

இவ்விவகாரம் தொடர்பாக பிசிசிஐ கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind