"கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது"

share on:
Classic

கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 தொகுதி இடைத்தேர்தலில் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 15,939 காவலர்களும், 1,300 சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார். அரவக்குறிச்சியில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என்றும், பதற்றம் நிறைந்த 656 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தேர்தல் ஆணைய இளையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறிய அவர், கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு குறித்து கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார். தேனியில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் பெயர் எம்.பி என கல்வெட்டில் போடப்பட்டது குறித்து புகார் எதுவும் வரவில்லை, புகார் வந்தால் அது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

News Counter: 
100
Loading...

Ragavan