"சுத்தி சுத்தி வந்தீக" என வானில் விளையாடிய விமானம்... 200 பயணிகளின் கதி என்ன??

share on:
Classic

'ஹவாய் ஏர்லைன்ஸ்' விமானம் ஒன்று தொடர்ந்து வானில் வட்டமிட்டு சுற்றி சுற்றி இரண்டு முறை கிளம்பிய விமான நிலையத்துக்கே வந்து அரட்டை அடித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து 2 முறை:

'லாஸ் ஏஞ்சில்ஸ்' விமான நிலையத்தில் இருந்து 'மயூ கஹலி' விமான நிலையத்துக்கு கிளம்பிய 'ஹவாய் 33' என்ற விமானம் பல மணி நேரம் வானில் பறந்த பின்னர் திரும்ப கிளம்பிய விமான நிலையத்திற்கே வந்து சேர்ந்தது. ஒன்றல்ல இதே மாதிரி தொடர்ந்து இரண்டு முறை இந்த கூத்து நடந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் இடைஞ்சலுக்கு ஆளாகினர். மூன்றாவது முறையாக கிளம்ப இருந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது.

 

200 பயணிகளின் நிலை:

ஹவாய் விமான நிறுவனம் இதுபற்றி கூறுகையில் " விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இப்படி நடந்தது"  என்று கூறியுள்ளது . எனினும் என்ன கோளாறு என்பதை அந்நிறுவனம் தெளிவாக வெளியிடவில்லை. 'Tracker' மூலம் கவனித்ததில் முதல் முறை பறக்க ஆரம்பித்த அந்த விமானம் இரண்டு மணி நேரம் பறந்த பிறகு கிளம்பிய இடத்திற்க்கே வந்துள்ளது. இரண்டாவது முறையோ சுமார் 5.5 மணி நேரம் 'பசிபிக்' பெருங்கடல் அருகே வானில் சுற்றிய விமானம் திரும்ப லாஸ் ஏஞ்சில்ஸ் விமான நிலையத்திற்கே வந்து அதிர்ச்சியளித்தது. சரியான காரணம் தெரியாத நிலையில் அந்த விமானத்தில் இருந்த 200 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

 

 சீறிய பயணிகள் :

அந்த விமான அதிகாரிகள் இது பற்றி கூறும் போது" தடங்களுக்கு மன்னியுங்கள். பயணிகளின் பாதுகாப்பே பிரதானம். திடீரென்று ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று கூறுகின்றனர். ஆனால் சில பயணிகள் இதனால் கடுப்பாகியும் உள்ளனர். முக்கியமாக அன்று 'மயூ' பகுதியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு ஒப்பந்தமான இசை கலைஞர் ஒருவர் "கோளாரான விமானங்களை ஏன் வானில் பறக்க விடுகிறீர்கள். இதெல்லாம் முன்னாடியே பார்க்க மாட்டீர்களா" என்று சீறுகிறார். இதற்கு ஈடாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டண தொகையுடன் சில சலுகைகளையும் சேர்த்து வழங்க முன் வந்துள்ளது அந்நிறுவனம்.

 

News Counter: 
100
Loading...

youtube