"வீட்டை விட்டு வெளியே வருவதில்லை"...சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியாவின் சோக நிலை..!!

share on:
Classic

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியாவின், சோக நிலை குறித்து அவரது தந்தை செய்தியாளர்கள் முன்பு கூறியுள்ளார்.

பெண்களை ஆபாசமாக பேசிய ஹர்திக்  
கரண் ஜோஹ்ரின்" காஃபி வித் கரண்" நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியாவும், KL ராகுலும் பேசிய பல விஷயங்கள் சர்ச்சைக்குள்ளானது. முக்கியமாக பெண்களை ஆபாசமாக பேசிய ஹர்திக் பாண்டியா கடும் கண்டனத்திற்கு ஆளானார். இதனால் அவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்பட்டனர். இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒரு நாள் போட்டியில் விளையாட தடை விதித்தது BCCI.

கங்குலி ஆதரவு கரம் 
இருவரும் BCCI முன்பும், மக்கள் முன்பும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விட்ட போதிலும், இந்த பிரச்சனை இன்னும் சரியானதாக தெரியவில்லை. இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான், தங்கள் தவறை உணர்ந்து வெளிவருவார்கள்" என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பேசியிருந்தார். அவரை தவிர வேறு யாரும் அவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை. 

வீட்டை விட்டு வெளியே வருவதில்லை 
இந்நிலையில் அவரது தற்போதைய நிலை பற்றி அவரது தந்தை ஹிமான்ஷு செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார் "ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தது முதல் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை, எந்த ஒரு அழைப்புகளையும் ஏற்கவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டிருந்த ஒரு நாள் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். இன்று பட்டம் விடும் திருவிழாவுக்காக குஜராத்தில் விடுமுறை தினம். பட்டம் விடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஹர்திக் அதற்கு கூட வெளியே வரவில்லை. இந்த தற்காலிக நீக்கம் அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய விதத்திற்காக அவர் ஏற்கனவே வருத்தத்தில் உள்ளார். இது பற்றி அவரிடம் நாங்கள் யாரும் பேசுவதில்லை. அவரது அண்ணன் கூட இதுவரை அந்த நிகழ்ச்சியை பற்றி அவரிடம் பேசவில்லை. BCCI யின் முடிவிற்காக காத்திருக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind