”ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது”

share on:
Classic

உள்ளாட்சி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா, பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரின் சிலைகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவ படங்களுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது எனவும் தெரிவித்தார். 

 

News Counter: 
100
Loading...

aravind