தலைவலியால் அவதியா..?? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

share on:
Classic

தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. தலைவலி  என்றாலே உடனே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

இது போன்ற மாத்திரைகளை போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலிக்கான காரணங்கள்:
பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும். கணினி, மொபைல் என எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு, கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து, பார்வை மங்கலாகும். அதன் அறிகுறிதான் தலைவலி.

கண்களில்  ஏற்படும் பிரச்னைகளால்தான் தலைவலி வருகிறது. அரை மணிநேரத்துக்கு ஒரு முறையேனும், இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும். 

தலையில் திடீரென, கடுமையான வலி தலைச்சுற்று, விறைப்பான கழுத்து, வாந்தி அல்லது குமட்டல், குழப்பம், பேச்சில் தெளிவின்மை அல்லது மாற்றம், இரட்டைப் பார்வை அல்லது பார்வையிழப்பு, அல்லது உடலின் ஒரு பகுதியில் பலவீனம் போன்ற அறிகுறிகளுடன் சேர்ந்து வரும் தலைவலி இப்படி இருந்தால் மருத்துவரை உடனடியாக அனுக வேண்டும்.

தலைவலியை போக்க:
சிறு வயதிலிருந்தே சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதையும் எட்டு மணி நேரம் முறையான தூக்கத்தையும் கடைபிடித்தால் தலைவ்லி வராமல் தடுக்க முடியும். தலைவலி அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல. உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். மைக்ரேன் வராமல் தடுக்கக்கூடிய மருந்துகளை, மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan