குதிங்கால் வெடிப்பால் அவதியா...? உங்களுக்கான டிப்ஸ்....!!

share on:
Classic

வெளியில் செல்லும் போது செருப்புக்களை அணியாமல் செல்வதாலும், பாதங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பத்தாலும் பாத வெடிப்புகள் ஏற்படுகிறது. மேலும் வெடிப்புகள் அதிகமானால், பாதங்களில் இரத்தம் வடிந்து கடுமையான வலியும் ஏற்படுகிறது. இதனால் நடக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது.

குதிங்கால் வெடிப்பிலிருந்து அழகான மென்மையான பாதங்களை பெற சில இயற்கையான முறையில் மருந்துவம்  நிறைந்த பொருட்களை பயன்படுத்தி வந்தால் நிச்சயம் குதிகால் வெடிப்பை சரி செய்யலாம். ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் எலும்பிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து அதில் பாதங்களை 15 முதல் 20 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிங்காளை தேய்க்க வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் தூங்கும் முன் பயன்படுத்தி வந்தால் பாத வெடிப்பிலிருந்து விடுபடலாம்.

மேலும் குதிங்கால் வெடிப்புகளை நீக்க கால்களை நன்கு சுத்தம் செய்து பின் வெஜிடபிள் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து ஊற வைத்து காலையில் எழுந்து கால்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதனை தினமும் பின்பற்றி வந்தால் பாதவெடிப்பு முற்றிலும் நீங்கும். பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பின் உலர வைத்து எலுமிச்சை சாறு மற்றும் வேஸ்லின் கலந்த கலவையை தேய்த்து இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சுத்தம் செய்து வந்தால் பாதவெடிப்பு முற்றிலும் நீங்கும்

News Counter: 
100
Loading...

aravind