அவகாடோ உண்பதால் ஏற்படும் நன்மைகள்

share on:
Classic

அவகாடோ தட்பவெட்பமான காலநிலையுள்ள சூழலில் வளர்கிறது. இப்பழத்தை வெண்ணெய் பழம் என்றும் கூருவார்கள்.ஆரோக்கியமான கொழுப்பு அளவை இப்பழம் பராமரிப்பதால் இதய நோய்,உயர் இரத்த அழுத்தம், மற்றும் சில இரைப்பை குடல் நோய்களையும் தடுக்கிறது.
 
ஆரோக்கியமான மோனோஅன்சாட்சுரேட்டட் கொழுப்பு சத்து இப்பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இப்பழத்தில் கிட்டத்தட்ட 20 வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இப்பழத்தை உண்பதால் நீரிழிவு, இதய நோய்,சில வகையான புற்று நோய்களையும் தடுக்கிறது. மேலும் உடல் பருமனை குறைத்து அழகிய தோற்றத்தை அளிக்கிறது.அவகாடோவை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆரோக்கியமான சருமத்தையும், அடர்த்தியான கூந்தலையும் பெறலாம். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க இது உதவுகிறது. 

அவகாடோ பழத்தில் வைட்டமின் C, E, K மற்றும் B -6, நியாசின், ஃபோலேட், ரைபொஃப்லெமின், பேண்டோதெனிக் அமிலம், மக்னீசியம், மற்றும் பொட்டாசியம் 
அதிகளவில் இருப்பதாக பல ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளது. மேலும் இதில் லுடீன், பீட்டா-கரோட்டின், மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன.கர்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு இப்பழத்தில் உள்ள ஃபோலேட் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும். 

நம் வாழ்வில் துரித உணவுகளை தவிர்த்து இயற்கையான முறையில் கிடைக்கும் காய், கனி, கீரை வகைகளை உண்டுவந்தால் ஆரோகியம் நிச்சயமே.
 

News Counter: 
100
Loading...

Ramya