மாரடைப்பை தவிர்க்க ஈஸி டிப்ஸ்!!

Classic

ஆணாதிக்க ஆண்களின் இதயம் மற்றும்  மிகுந்த கோபம் கொள்பவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவர்களது இதயம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இதனால் மாரடைப்பு ஏற்படக்கூடும் எனவே,அதனை இரக்க குணம் மற்றும் அன்பினால் குணப்படுத்த முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாரடைப்பு : 

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு,மூக்கிற்கு மேல் கோபம் போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.கோபம் உறவுகளை அழிப்பதை விட, உங்களையே அழித்து விடும் என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், அளவுக்கு அதிகமான கோபத்தினால்  மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்க நேரிடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கோபம் : 

நீங்கள் விமர்சிக்கப்படும்பொழுதும்,பிறர் முன் நாம் தாழ்ந்து போகும்போது அதன் எதிர்வினையாக  வெளிப்படும் உணர்ச்சியின் பெயர் தான் கோபம். கோபம் வருவதால் நம் சிந்தனை சிதறடிக்கப்படுகிறது.அனைத்தையும் இறுதியில் இழக்க முக்கிய வழிவகுக்கும் கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்பட்டு இறுதியில்  மாரடைப்பு தான். கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான்.இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகம்.
 

 

மாரடைப்பை ஏற்படுத்தும் கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்

வெறுப்பை கைவிடுங்கள். 

அவசரம்,பதற்றத்துடன் ஒரு காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

எந்த ஒரு குழப்பமும் இல்லாமல், செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்வது நலம்.

கோபம் வருகிற சூழ்நிலைகளில் பேசுவதை தவிர்த்திடுங்கள்.

ஆழமான பெருமூச்சு விடுங்கள்.

வாக்கிங் மற்றும் யோகா,விளையாட்டுகளில் கவனம் செலுத்துங்கள்.

எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

இதயத்தை பலமாக்க நல்ல ஓய்வு தேவை.

கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் அனைவரிடமும் அன்பாக பேசுங்கள்,பொறுமையாய் இருந்து மாரடைப்பை தவிருங்கள்.

News Counter: 
100
Loading...

youtube