வெப்பத்தால் சருமம் பாதிக்கிறதா..?உங்களுக்கான டிப்ஸ்..!!

share on:
Classic

இன்று நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிக்கும் நிலையில் உடல் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது.

அதில் பெரிதும் பாதிக்கப்படுவது சரும பிரச்சனைகள் தான். முகத்தையும், சருமத்தையும் பராமாரிக்க கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதை விட வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கப்படும் பொருட்களைக் கொண்டு பராமரிக்கலாம். அந்த வகையில் உங்களுக்கான டிப்ஸ். 

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க :
அதிக உடற்சூட்டினாலோ அல்லது வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு முகத்தில் புள்ளிகள் தோன்றும், இதற்கு முள்ளங்கி சாறுடன் இரண்டு ஸ்பூன் மோர் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு : 
கைகால்களில் பொரிப்பொரியாக இருக்கும். அதனை போக்க பார்லி பவுடர் 4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் 1டீஸ்ப்பன் கலந்து தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் பொரிப்பொரியாக இருப்பது குறைவதுடன் சருமத்திற்கு பொலிவாகவும் இருக்கும்.

கழுத்தில் சுருக்கம் ஏற்படுவதை போக்க : 
அதிகமாக வியர்வை சுரக்கும் இடமான கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள். 

இவ்வாறு செய்வதன் மூலம் வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதோடு சரும பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan