கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

share on:
Classic

கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கமல் ஹாசன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் ஹாசன் நாட்டின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சார்ந்த கோட்சே என தெரிவித்தார். இதற்கு பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் ஹாசன் வீட்டில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind