தேனி, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

share on:
Classic

தமிழகம், புதுவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தேனி, வேலூர், நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan