வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்..! கேரள மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுப்பு..!!

share on:
Classic

வடமாநிலங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

வட மாநிலங்களான அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாவட்டங்கள் தொடர் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீவாக மாறியுள்ளன. இமாச்சலப்பிரதேசத்தின் கர்சோக் பகுதியில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

அசாம், பீகார் மாநிலங்களில் மழை தொடர்பான விபத்துக்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 14 பேரும், மிசோரத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கேரள மாநிலத்திற்கு கனமழை எச்சரிக்கையான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

Ragavan