3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

share on:
Classic

தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரைக்கும் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கேரளாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட கனமழை காரணமாக பல்வேறு இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நீலகிரி, கேரளா போன்ற இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

News Counter: 
100
Loading...

Ragavan