நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை.., விளைநிலங்கள் நாசம்..!

share on:
Classic

நீலகிரியில் விடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

நீலகிரியில் எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. முக்கிய சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்று வருகின்றன. கேரட் விளைநிலங்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருப்பதாலும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan