தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை

share on:
Classic

தருமபுரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. 

தருமபுரி அருகேயுள்ள மூங்கில் மடுவு, அஜ்ஜம்பட்டி, முதுகம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றின் காரணமாக மூலபெல்லூர் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததால், இரண்டு வீடுகள் தீக்கிரையாகின. மேலும் ஏராளமான வீடுகளின் மேற்கூரை சூறைக்காற்றுக்கு தாங்காமல் தூக்கி வீசப்பட்டது.  இதனால் அப்பகுதி மக்கள், அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind