நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும்..எந்த ராசிக்கு தெரியுமா..?

share on:
Classic

மேஷம்: 

சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் அதிருப்தி 
அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர் சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்:

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியம் தடைப்படலாம்.  

மிதுனம் : 

நல்ல செயலை நண்பர் பாராட்டுவார். மனதில் நம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

கடகம்: 

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம் :

கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். குறை கூறியவர்களே பாராட்டுவர்.செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய வழிவகுத்துக் கொள்வீர்கள்.      

கன்னி : 

செயல் திறன் வளரும். மங்கலத்தன்மையுடன் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவில் சேமிப்பு கூடும். பணிபுரியும் பெண்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

விருச்சிகம்: 

ராசிக்குள் சந்திரன்நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். அதிகம் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான  சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள். 

தனுசு : 

நற்செயல்களை சிலர் விமர்சனம் செய்வர். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்: 

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நவீன மின்னலை சாதனங்கள் வாங்கு வீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய  வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.   

கும்பம்:

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாளைய ஆசைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். உத்தியோக அனுகூலம் உண்டு.      

மீனம் : 

திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதமாகலாம். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள் தரமறிந்து உண்ணவும். தாயின் அன்பு ஆசி மனதிற்கு ஆறுதல் தரும். 

News Counter: 
100
Loading...

youtube