கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை..!!

share on:
Classic

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் கொலையுதிர் காலம். இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியள்ளது. இந்நிலையில், சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாகவும், இந்த படத்தை வெளியிடக்கூடாது எனவும் பாலாஜிகுமார் எனபவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி இந்த திரைப்படத்திற்கு தடைவிதித்துள்ளது. மேலும் இந்த படத்தின் தயரிப்பாளர் ஜீன் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan