மதுரையில் தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி..!

share on:
Classic

பணபட்டுவாடா நடைபெறுவதால், மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

மதுரை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவில் ஈடுபடுவதால் அங்கு நடைபெற உள்ள தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையெடுத்து பொது நலன் என்ற பெயரில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind