வேலூர் தேர்தல் ரத்துக்கு தடை இல்லை..உயர்நீதிமன்றம் அதிரடி..!

share on:
Classic

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிவித்தது. இதனை எதிர்த்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சுகுமாரன் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

வழக்கு விசாரணையின் போது தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும் தேர்தலை நடத்தவும் கண்காணிக்கவும் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தனர். 

எனவே, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யாமல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 ஆம் தேதிக்கு முன்னதாக ஒரு நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. வேலூர் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

News Counter: 
100
Loading...

aravind