தருமபுரியில் அதிகபட்ச வாக்குப்பதிவு - சத்யபிரத சாகு

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரியில் 80 புள்ளி 49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரியில் 80 புள்ளி 49 சதவீத வாக்குகளும்,  குறைந்தபட்சமாக தென் சென்னையில் 56 புள்ளி 41 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில் 82 புள்ளி 26 வாக்குப்பதிவும் குறைந்தபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 64 புள்ளி 14 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றும், கட்டாயப்படுத்தி வாக்களிக்க வைக்க முடியாது என்றும் விளக்கமளித்தார்.

 

News Counter: 
100
Loading...

Ragavan