ஹில்டன் ஹோட்டலிடம் ரூ. 700 கோடி நஷ்ட ஈடு கேட்கும் இளம்பெண்...

Classic

ஹில்டன் நிறுவனத்தின் தலைமையில் இயங்கும் ஹோட்டலின் குளியலறையில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த குற்றத்திற்காக ரூ. 700 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளம்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

ஹோட்டல் மீதான நம்பிக்கை:
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள 'ஹாம்ப்டன் இன்' ஹோட்டலில், கடந்த 2015-ஆம் ஆண்டு  சட்டப்படிப்பு மாணவி ஒருவர் தேர்வெழுதுவதற்காக தங்கியிருந்தார். பிரபல ஹில்டன் நிறுவனத்தில் கீழ் இயங்கி வரும் இந்த ஹாம்ப்டன் இன் ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு அதிகம் என்பது பொதுவான நம்பிக்கை. இதனால் மற்ற ஹோட்டல்களைக் காட்டிலும் இந்த ஹோட்டலில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் குறிப்பாக பெண் வாடிக்கையாளர்கள் தங்கிச் செல்வார்கள். இதன் காரணமாகவே சட்டப்படிப்பு மாணவியும் நம்பிக்கையோடு தங்கியிருந்தார். 

குற்றம் நடந்தது என்ன:
ஹாம்ப்டன் இன் ஹோட்டலில் தங்கி வெற்றிகரமாக தேர்வெழுதி முடித்த அந்த இளம்பெண்ணுக்கு 3 ஆண்டுகள் கழித்து அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு  மின்னஞ்சல் வந்தது. அதில், 'உனது பெயர் தலைப்பிடப்பட்டு ஒரு ஆபாச வீடியோ இணையத்தில் பரவி வருகிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த வீடியோவை காண்பதற்கான லிங்க்கும் இணைக்கப்பட்டிருந்தது. அந்த லிங்க்கை கிளிக் செய்த இளம்பெண் அதிர்ச்சியில் திகைத்தார். ஹாம்ப்டன் இன் ஹோட்டலில் தாம் குளித்துக்கொண்டிருந்த காட்சியை யாரோ ரகசியமாக படம்பிடித்து எண்ணற்ற ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்திருந்ததை உணர்ந்து பதற்றமடைந்தார். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும், மீள முடியாத அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

ரூ. 700 கோடி நஷ்ட ஈடு:
மர்ம நபர் ஒருவரிடமிருந்து அடிக்கடி மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததைத் தொடர்ந்து அந்த பெண் நீதிமன்றத்தை நாடினார். இச்சம்பவத்தை வழக்காக தாக்கல் செய்த பெண், 19 பக்கங்கள் கொண்ட மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த மனுவில், தாம் நிர்வாணமாக குளிப்பதை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டதற்கு ஹாம்ப்டன் இன் ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியரே காரணமாக இருக்க வேண்டும் என்றும், இதற்காக ஹில்டன் நிர்வாகம் தமக்கு  ரூ. 700 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு ஹில்டன் நிறுவனத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 
 

News Counter: 
100
Loading...

mayakumar