இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையருக்கு நீதிமன்ற காவல்

share on:
Classic

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில், இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை நீதிமன்ற காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் 8 7 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உட்பட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணிக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் நேற்று கைது செய்யப்பட்டார். 

பின்னர், சிலை கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்படும் கும்பகோணம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வீரசண்முகமணியை, வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

News Counter: 
100
Loading...

sajeev