அமெரிக்காவில் இந்து மதத்தை சேர்ந்தவர்களே அதிகம் படித்தவர்கள்...

share on:
Classic

அமெரிக்காவில் கல்லூரிபடிப்பை வைத்து நடத்தப்பட்ட  ஆய்வில், மற்ற மதங்களை விட இந்து மக்களே அதிகம் படிப்பறிவுமிக்கவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஆய்வு கூறும் முடிவுகள்: 
இந்த ஆய்வின் முடிவில் கல்லூரி படிப்பை முடித்தவர்களில் 77 சதவீதம் பேர் இந்து மதத்தை  சார்ந்தவர்கள், 67 சதவீதம் பேர் மனிதர்களில் எந்த பாகுபாடும் இல்லை என்று சொல்லும் 'யூனிடேரியன்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் , யூதர்கள் 59 சதவீதிதமும், கடவுள் இல்லை என்று கூறும் 'ஏதிஸ்டுகள்' 43 சதவீத இடத்தை பிடித்து சென்றனர். 

அமெரிக்கா வாழ் இந்துக்கள் :
அமெரிக்கா அரசாங்கம், மதத்தை அடிப்படையாக வைத்து மக்களை கணக்கு எடுப்பதில்லை ஆனால் தோராயமாக அங்கு 0.7 சதவீதம், அதவது 325 கோடி மக்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றது.அமெரிக்காவில் இந்து மதம் சிறுபான்மை மாதமாக கருதப்பட்டாலும். இந்த மதத்தில் இருக்கும் பல கோட்பாடுகளும் வழக்கங்களும் வெளி நாட்டு மக்களை அதிகம் ஈர்க்கிறது. அதிலும் இந்து மதத்திற்கு தொடர்பான கலைகளும், யோகா பயிற்சியும் வெளிநாடுகளில் மிக பிரபலமாகி வருகிறது.

கல்வியும் பொருளாதாரமும்: 
அதில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்களின் வம்சாவாளிகள். இதில் பலரும் வருடத்திற்கு குறைந்தது ஒரு லட்சம் டாலர்களாவது சாம்பாதிக்கிறார்கள். மேலும் கல்வி தகுதி எப்படி ஒருவரது பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது என்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sankaravadivu