ஹார்லிக்ஸ் நிறுவனத்தை 31,700 கோடிக்கு வாங்கிய பிரபல நிறுவனம்..!

share on:
Classic

கிளாஸ்கோ ஸ்மித் க்ளைன் நிறுவனத்தின் இந்தியத் தயாரிப்பான ஹார்லிக்ஸ் பிராண்டை  ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனமான கிளாக்சோஸ்மித் கிலைன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான கிளாக் சோஸ்மித்கிலைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பிராண்டுகள் அந்தந்தப் பிரிவில் இந்தியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இதன் பிராண்டான ஹார்லிக்ஸ் நிறுவனம் உலகப் போரின் போது ராணுவ வீரர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்க துவங்கப்பட்டது. 

140 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் கால் பதித்த ஹார்லிக்ஸ் சந்தையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஹார்லிக்சை விலைக்கு வந்தவுடன் அதனை வாங்க யூனி லிவர், கோக கோலா, கிராப்ட் ஹெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியில் ஈடுபட்டன. 

இதில் வெற்றி பெற்றுள்ள யூனிலிவர் நிறுவனம் 31,700 கோடி ரூபாய் கொடுத்து ஹார்லிக்சை விலைக்கு வாங்கி உள்ளது. இதன் மூலம் ஹார்லிக்ஸ் மீண்டும் ஒரு இங்கிலாந்து நிறுவனத்திடமே கைமாறி உள்ளது. இந்திய ஊட்டச்சத்து பான சந்தையில் ஹார்லிக்ஸ் விற்பனை 43 சதவிகிதம் என்பதும், கடந்த நிதியாண்டில், ஹார்லிக்ஸ் விற்பனை மூலம் கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் நிறுவனம் 4200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.​

News Counter: 
100
Loading...

aravind