ஓவியராக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஹிட்லர் : சர்வாதிகாரியானது எப்படி..?

share on:
Classic

சிறந்த ஓவியராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி..? ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

ஓவியராக ஆசை : 

1889-ம் ஆண்டு வட ஆஸ்திரியாவின் பிரானவ் என்ற ஊரில் இதே நாளில் தான் ஹிட்லர் பிறந்தார். இவரது தந்தை அலாய்ஸ் ஷிக்கிஸ் மிகக் கண்டிப்பானவர். அவர் குடிபோதையில் தனது தாயை திட்டுவதால் அவர் மீது வெறுப்பு உண்டானது. மேலும் அவரது தந்தை ஒரு விசில் அடித்தவுடன் ஹிட்லர் போய் அட்டனஷனில் நிற்பாராம். தந்தை அடிக்கடி வெளியூருக்கு செல்வதால் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயதிலிருந்தே நல்ல படிப்பாளி. அவரை ஏதாவது அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்பட்டார். ஆனால் ஹிட்லருக்கோ ஓவியத்தில் நாட்டம் இருந்தது. ஆசிரியர் கண்டித்ததால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஓவியராக வேண்டும் என்ற கனவில் வியன்னா சென்று அர்ட் அகாடமியில் சேர்ந்தார். பின்னர் தனது ஓவியங்கள் மூலம் பிழைப்பு நடத்திய ஹிட்லர் பிழைப்புக்காக ஜெர்மனி சென்றார்.

ராணுவத்தில் சேர்ந்தார் :

ஓவியத்தால் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதால், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய எண்ணி ராணுவத்தில் சேர்ந்தார். 1914 - 1918 வரை நடந்த முதல் உலகப்போரில் சாதாரண ராணுவ வீரராக போர் புரிந்தார். அந்த போரில் விஷ வாயு தாக்கியதில் தற்காலிகமாக கண் பார்வையை இழந்தார் ஹிட்லர். அந்த போரில் ஜெர்மனி சரணனடைந்தை துரோகம் என்று எண்ணினார். அதற்கு காரணமான யூதர்களையும், கம்யூனிஸ்ட்களையும் அழிப்பேன் என்று உறுதி பூண்டார். அதன்பிறகு தேசிய சோசியலிஸ் ஜெர்மன் தொழிலாளர் என்ற கட்சியில் உறுப்பினரானார். இந்த கட்சியின் சுருக்கமே நாஜி என்று அழைக்கப்பட்டது. பின்னர் அரசுக்கு எதிரான அவரது ஆவேசமான பேச்சால் சிறந்த பேச்சாளராக மாறினார். 1923-ல் அரசை கவிழ்க்க ஹிட்லர் முயற்சித்ததாக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சர்வாதிகாரி :

சிறையில் இருந்து வெளியே வந்த ஹிட்லர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இருப்பினும் ஆட்சியமைக்க அவரின் ஆதரவு தேவைப்பட்டதால் ஹிட்லருக்கு அதிபருக்கு அடுத்த பதவியான சான்சலர் பதவி கொடுத்தார் அதிபர். அதிபர் இறந்த பின் ஜெர்மனியின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி சர்வாதிகாரியானார் ஹிட்லர். யூதர்களை சிறையில் அடைத்து இருட்டறை, விஷப்புகை, துப்பாக்கி சூடு என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முதல் உலகப்போரில் தோற்றதால் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை பழிவாங்க எண்ணிய ஹிட்லர் எந்த முன்னறிவிப்புமின்றி 1939-ல் போலந்து மீது போர் தொடுத்தார். பின்னர் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை கைப்பற்றினார்.

ரகசிய ஒப்பந்தம் : 

இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஜெர்மனியுடன் சேர்ந்தன. ஆசியப்பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கி கைப்பற்ற வேண்டும் என்ற ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதற்கு ஹிட்லர் கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியது. 1944-ல் ஜூலை 20-ல் தளபதிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்ட போது அருகில் இருந்த மர்ம சூட்கேஸை அவரது மெய்க்காப்பாளர் தள்ளிவிட்டார். அதிலிருந்த குண்டுகள் வெடித்ததில் காயங்களுடன் உயிர் தப்பினார் ஹிட்லர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 5000 பேர் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டனர். 

தற்கொலை :

இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி சிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரகசிய படைகளை அனுப்பி முசோலினி மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டார் ஹிட்லர். எனினும் முசோலினியும் அவரது காதலியும் புரட்சிக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அடுத்த சில நாட்களில் ரஷ்ய படைகள் பெர்லினை சூழ்ந்தன. எதிரிகள் கையில் உயிரை விட விரும்பாத ஹிட்லர், தனது காதலியுடன் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். ஹிட்லர் எனும் சர்வாதிகாரி இறந்து விட்டார். ஆனால் சர்வாதிகாரம்..?

News Counter: 
100
Loading...

Ramya