வடமாநிலங்களில் களைகட்டத் தொடங்கிய ஹோலி..!

share on:
Classic

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகை வடமாநிலங்களில் களைகட்டத் தொடங்கியுள்ளது. 

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலிப் பண்டிகை வரும் 20, 21 தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் லத்மார் ஹோலி மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

கண்ணனை ராதையும் அவளது தோழிகளும் கம்பால் விரட்டியடித்ததை குறிக்கும் வகையில், மதுராவில் உள்ள பெண்கள், ஆண்களை விரட்டி, விரட்டி கம்பால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களிடம் ஆண்கள் சிக்கித் தவிக்கும் விசித்திர விழாவில், குதுகாலம் கரைபுரண்டோடியது.

 

News Counter: 
100
Loading...

sajeev