வாழ்ந்தா கோலி-அனுஷ்கா மாதிரி தான்யா வாழனும் !!

share on:
Classic

நியூஸிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பிறகு ஓய்வில் இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தன் மனைவி அனுஸ்காவுடன் விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் நட்சத்திர வீரர் 'விராட் கோலி'யும் நடிகை 'அனுஷ்கா சர்மா'வும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கிரிக்கெட்டில் கோலியும், நடிப்பில் அனுஷ்காவும் ஓய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருவதால் இருவருக்கும் வெளியே செல்ல அதிக நேரம் கிடைப்பதில்லை. 

இந்நிலையில் நியூஸிலாந்தில் நடந்த 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அந்த தொடரின் கடைசி 2 போட்டிகள் மற்றும் T20 தொடருக்கும் சேர்த்து அவருக்கு விடுப்பு அளித்துள்ளது பிசிசிஐ. மேலும் அவருக்கு பதில் துணை கேப்டன் 'ரோஹித் சர்மா'அணிக்கு தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையில் என்ன செய்யலாம் என்று யோசித்தவர், பெட்டி படுகைகளை கட்டிக்கொண்டு அனுஷ்காவுடன் நியூசிலாந்து கிளம்பி சென்றுள்ளார். தற்போது நியூஸிலாந்து காடுகளில் சுற்றித் திரியும் இந்த இளம் ஜோடியின் புகைப்படங்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை பார்த்த இளைஞர்கள் பலரும் ’வாழ்ந்தா இவங்கள மாதிரி தான் வாழனும்’ என்று கனவில் மூழ்கியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

youtube