குழந்தைகளுக்காக வெளியாகும் கோலிவுட், ஹாலிவுட் திரைப்படங்கள்..!!

share on:
Classic

கோடை காலம் வந்துவிட்டாலே வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும், அதிலும் வாரம் வாரம் வெளியாகும் படங்களில் ஒரு படமாவது குழந்தைகளை கவரும் படமாக வெளியாகிவரும், அப்படி இந்த வருட கோடை விடுமுறையில் குழந்தைகளை கவர்ந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து இருந்த படம் காஞ்சனா3. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா என்று பலர் நடித்து உள்ளனர், திகில் கலந்த பேய் படமாக கடந்த மாதம் வெளியாகி இருந்த இந்த படம் குழந்தைகளை மிக பெரிய அளவில் கவர்ந்து இருந்தது.

அதே போல் ஹாலிவுட்டில் fantasy கலந்த காமெடி படமாக மார்ச் இறுதியில் வெளியான படம் தான் Dumbo. இந்த படத்தை Tim Burton இயக்கி இருந்தார், சர்க்கஸ் மற்றும் ஒர் அதிசிய பறக்கும் யானையை மையமாக வைத்து உருவாக்கி இருந்த இந்த படம் அதிக குழந்தை ரசிகர்கள் கவர்ந்து இன்று வரை திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

Dumbo படத்தை போலவே pokemon seriesயின் மிக முக்கியமான கேரக்டரானா Pikachu கேரக்டரை மையமாக வைத்து உருவாக்கி இருந்த படம் தான் Pokemon Detective Pikachu. இந்த படத்தை Warner brother Pictures தயாரிப்பில் Rob Letterman இயக்கி இருந்தார். மிக பெரிய எதிர்பார்ப்போட மே 10ஆம் தேதி வெளியான இந்த படம் குழந்தை ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாகவே அமைந்தது.

கோலிவுட்ல முதல் முறையாக ஒரு எலியா மையமாக வைத்து fantasy கலந்த காமெடி படமாக உருவாக்கி இருந்த படம் தான் monster. இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்க sj.சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார் மேலும் sj.சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர், கருணாகரன்-னு பலர் நடிச்சு இருக்குறாங்க. புதிதாக ஒரு வீடு வாங்கும் sj.சூர்யா, இந்த வீடால் தன்னுடைய எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும் என்று நினைக்கும் sj.சூர்யாவிற்கு புதிதாக வரும் பிரச்சனை தான் எலி, இந்த எலியை எப்படி வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார் என்பதை காமெடி கலந்த fantasy படமாக உருவாக்கி இருக்குறாங்க.

News Counter: 
100
Loading...

Ragavan