மொபைல் பிரியர்களுக்கு விருந்தளிக்க வருகிறது ஹானர் வியூ 20 : அப்படி என்ன ஸ்பெஷல்?

share on:
Classic

ஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானோர் வியூ 20 மொபைல் 48 மெகா பிக்சல் கேமரா உடன் ஜனவரி 29- ம் தேதி வெளியாக உள்ளது. 
சர்வதேச அளவில் ஹானர் வி20 என்ற ஸ்மார்ட்போன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.அதே ஸ்மார்ட்போனை தான் பெயர் மாற்றி தற்போது ஹானர் வியூ 20-ஆக இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடுகிறது.

ஜன.22-ஆம் தேதி இந்த மாடல் ஸ்மார்ட்போனை ஹானர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.இதனை தொடர்ந்து ,அமேசான் இந்தியா ஹானர் வியூ 20 ஸ்மார்ட் போனை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது 

விற்பனை விலை : 

6GB + 128 GB ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் வியூ 20 ஸ்மார்ட் போன் சீனாவில் 2,999 யுவான் (ரூ.30,400 இந்திய மதிப்பின் படி தோராயமாக) 8GB + 128 GB ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் வியூ 20 ஸ்மார்ட் போன் 3,499 யுவான் (ரூ.35,500 இந்திய மதிப்பின் படி தோராயமாக)-க்கும் விற்கப்படுகிறது.இந்தியாவில் அதிகார விலை பட்டியல் இனி அறிவிக்கப்படவில்லை.

செயல்திறன் : 

இந்த ஸ்மார்ட் போன் ஆனது எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள் கொண்ட ஃபிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் டிஸ்பிலே,25 மெகா பிக்சல் கொண்ட Artificial intelligence (AI) முன்பக்க கேமரா மற்றும் அதிவேகமாக சார்ஜ் மற்றும் பல அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் போன் வெளியாக உள்ளது.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட் போன் 6.3 இன்ச் டிஸ்பிளேயுடன் 1080 x 2310 பிக்ஸல் தீர்மானம் இவற்றுள் இடம் பெற்றுள்ளது.ஹைசிலிகான் கிரின் 980 பிராசஸர், 8 GB RAM , 4000mah  பேட்டரி போன்ற சிறப்பம்சங்களுடன் ஹானர் வியூ 20 ஸ்மார்ட் போன் வெளியாக உள்ளது.
 

News Counter: 
100
Loading...

youtube