திண்ணைல கெடந்தவனுக்கு திடுக்குனு கெடச்சுதாம் வாழ்க்கை.. சிம்ம ராசி அன்பர்களே...!

share on:
Classic

ஐப்பசி மாதப்பலன்கள்: ​

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1ம் பாகம்:

உங்களது திறமைகள் பளிச்சிடும் மாதமாக ஐப்பசி இருக்கும். இந்த மாத தொடக்கத்தில் புதன் பகவான் சூரியன், சுக்கிரனோடு இணைந்து துலாம் ராசியில் உங்களது ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருப்பதால் சாதகமான பலன்களை கொடுப்பார். உங்கள் ராசிநாதன் சூரியன் மூன்றாம் வீட்டில் இருக்கும் பொழுது செல்வாக்கு, மதிப்பு, மரியாதை உயரும். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் இருப்பதால் ஆடை, ஆபரணம் சேர்க்கை அதிக அளவில் உண்டாகும். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

பணப்புழக்கம் அதிகரிக்கம். கணவன் மனைவிக்கு இடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை வரம் வேண்டி இருப்பவர்களுக்கு மழலை செல்வம் கிட்டும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கின்றது. சொத்து சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் முடிவடையும். வேலை பார்க்கும் இடத்தில் உங்களது செல்வாக்கு உயரக்கூடும்.

குரு உங்களது பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும் ராகுவை பார்ப்பாதல் சற்று தூக்கமின்மை , கனவுத்தொல்லை ஏற்படலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேலை மாற்றம் அமையக்கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். கிரகங்கள் சாதகமாக இருக்கும் பொழுது சற்று முயற்சி செய்தால் நினைத்த வேலை அல்லது தொழில் சிறப்பாக அமையும்.

News Counter: 
100
Loading...

janani